ஓடிடியில் வெளியான ராம் சரணின் பெத்தி!
நடிகர் ராம் சரணின் பெத்தி திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்று(ஜூலை 9) வெளியாகியுள்ளது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நாயகனாக நடித்து வெளியான தெலுங்கு மொழித் திரைப்படம் பெத்தி.
விளையாட்டின் மூலம் அங்கீகாரம் பெறும் நாயகனின் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் சிவராஜ்குமார், ஜான்வி கபூர், திவ்யேந்து, ஜெகபதி பாபு, பொம்மன் இரானி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், இப்படம் ரூ. 400 கோடி வரை வசூல் செய்ததாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது