Select Location
All Locations
State
Region
City / District
வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்

வியட்நாம் நாட்டில் பூ குவாக் தீவு அருகே 32 இந்தியர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு வியட்நாமில் உள்ள பூ குவாக் தீவு (Phu Quoc Island) அருகே கடலில் படகு சவாரிக்கு, இந்திய சுற்றுலாப் பயணிகள் 32 பேர் சென்றுள்ளனர். சுற்றுலாப் படகில் அவர்களுடன் 3 ஊழியர்களும் இருந்தனர்

கடலில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 15 பேர் இறந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் உயிரிழப்பு எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை. கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகில் தமிழர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இன்று காலை 11.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து வியட்நாம் படகு விபத்து தொடர்பாக ஹோ சி மின் (Ho Chi Minh) நகரத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, +84 36 281 7930, +84 91 552 37 14, +84 33 452 0414 ஆகிய உதவி எண்களை அறிவித்துள்ளது. மேலும் ஹனோய் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள +84 91 308 9165 என்ற தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது.


Dinamani 1 hour ago
Home Flash News