திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர் கட்டணம் உயர்வு: மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர் கட்டணத்தை 50-200% வரை உயர்த்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி மாநகராட்சினுடைய அவசர கூட்டம் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற கூட்டம் அதற்கு பிறகு மூன்று மாதங்களாக நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது அவசர கூட்டம் 94 தீர்மானங்கள் வைக்கப்பட்டு பாஸ் செய்யப்பட்ட நிலையில் 8 நிமிடங்களில் கூட்டம் நிறைவடைந்தது. இதில் 60வது தீர்மானமாக குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டள்ளது. 600 சதுர அடி உள்ள வீடுகளுக்கு குடிநீர் கட்டணம் ரூ.120 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 1,200 சதுர அடி உள்ள வீடுகளுக்கு ரூ.150, 1800 சதுர அடி உள்ள வீடுகளுக்கு ரூ.180 கட்டணம் வசூலிக்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக அனைத்து வீடுகளுக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கட்டணம் சதுர அடி வகையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான வாய்ப்பு தொகையும் 6500 ரூபாயில் இருந்து 7500 ரூபாய் முதல் 40000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்விற்கு கையெழுத்திட்ட மாமன்ற உறுப்பினர்கள் பிறகாக ஆணையாளர் மற்றும் மேயரை நேரில் சந்தித்து அந்த தீர்மானத்தை நிறுத்தி வைப்பதற்கான கோரிக்கையும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.