இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் மட்டும் இல்லாமல் நான்காவதாக அறிவியல் தமிழையும் படிக்கவேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தல்
சென்னை: மறைமலை அடிகளாரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்லாவரத்தில் உள்ள மறைமலை அடிகளாரின் இல்லத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையடுத்து இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், மனித வளத்துறை அமைச்சர் சரத்குமார், பல்லாவரம் எம்எல்ஏ காமாட்சி, செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து, பல்லாவரம் பகுதியில் உள்ள மறைமலை அடிகளார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் சரத்குமார், மாணவர்களிடம் அவர்களின் கண்டுபிடிப்பு குறித்து கேட்டறிந்தனர்.Long Distance Bus & Rail
பின்னர், அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், ”இதே பள்ளியில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன். பள்ளிக்கல்வி துறை அமைச்சராக இருக்கலாம், இந்த பள்ளியில் மாணவனாக தேர்வு எழுதியது நெஞ்சில் ஞாபகமாக எழுந்துள்ளது. உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை யும் செய்துதருவது எங்களின் பொறுப்பு. உங்களுக்கான பொறுப்பு சந்தோசமாகவும், மகிழ்ச்சியாகவும் படிக்க வேண்டியது. இயல், இசை. நாடகம் என்ற முத்தமிழ் மட்டும் இல்லாமல் நான்காவதாக அறிவியல் தமிழையும் மாணவர்கள் படிக்கவேண்டும்” என்றார்.