Select Location
All Locations
State
Region
City / District
கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்​தில் பருவமழை வேகமெடுத்துள்​ளது. இந்​நிலை​யில் அங்​குள்ள 7 மாவட்​டங்​களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் (சிவப்பு எச்​சரிக்​கை) விடுத்​துள்​ளது. இதனால் அந்த மாவட்​டங்​களில் உள்ள பள்​ளி, கல்லூரி​களுக்கு விடு​முறை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த சில வாரங்​களாக கேரள மாநிலத்​தில் பலத்த மழை பெய்து வரு​கிறது. குறிப்​பாக, பத்​தனம்​திட்​டா, ஆலப்​புழா, கோட்​ட​யம் ஆகிய தென் மாவட்​டங்​கள் கனமழை​யால் கடுமை​யாக பாதிக்கப்​பட்​டுள்​ளன. தாழ்​வான பகு​தி​களை வெள்​ளம் சூழ்ந்துள்ளது.

வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​யில் வசிக்​கும் மக்​கள் மீட்​கப்​பட்டு நிவாரண முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். நிலச்சரிவு அபா​யம் உள்ள பகு​தி​யில் வசிக்​கும் மக்​கள் பகல் நேரங்​களில் பாது​காப்​பான இடங்​களுக்​குச் செல்​லு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளனர். ஆற்​றைக் கடப்​ப​தையோ அல்​லது வெள்ளப் பகு​தி​களைப் பார்​வை​யிடு​வதையோ பொது​மக்​கள் தவிர்க்​கு​மாறு கேட்​டுக் கொள்​ளப்​பட்​டுள்​ளனர். 

மாநிலம் முழு​வதும் மீட்​புப் பணி​களும் பாது​காப்பு நடவடிக்​கைகளும் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில் பரு​வ​மழை தீவிரமடைந்​துள்​ள​தால் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்​சரிக்கை வானிலை ஆராய்ச்சி மையம் நேற்று வெளி​யிட்​டுள்​ளது. ஆலப்​புழா, கோட்​ட​யம், எர்ணாகுளம், திருச்​சூர், பாலக்​காடு, கண்​ணூர், காசர்​கோடு ஆகிய 7 மாவட்​டங்​களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்​யும் என்று எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. இதைத் தொடர்ந்து அந்த மாவட்​டங்​களில் உள்ள அனைத்து பள்​ளி, கல்லூரி​களுக்​கும் விடு​முறை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த மாவட்​டங்​களில் மணிக்கு 15 மில்​லிமீட்​டர் மழை பெய்​யும் என்​றும், மணிக்கு 50 கிலோமீட்​டர் வேகத்​தில் காற்று வீசக்​கூடும் என்று எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், பத்​தனம்​திட்​டா, இடுக்​கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்​டங்​களுக்கு ஆரஞ்சு எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. இங்கு மணிக்கு 5 முதல் 15 மில்​லிமீட்​டர் மழை​யும், 50 கிலோமீட்​டர் வேகத்​தில் காற்​றும் வீசும் என்​றும் எச்​சரிக்கை அனுப்​பப்​பட்​டுள்​ளது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News