Select Location
All Locations
State
Region
City / District
2021 - 2026: பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்கள்

2021 - 2026: பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்கள்! எவ்வளவு செலவு தெரியுமா?

2021 முதல் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரசு கருவூலத்திலிருந்து குறைந்தது ரூ.557.51 கோடி செலவிடப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்களான சஞ்சய் சிங் மற்றும் டாக்டர் வி. சிவதாசன் ஆகியோர் `2021 முதல் பிரதமரின் வெளிநாட்டுப் பயண விவரங்கள், ஒவ்வொரு பயணத்திற்குமான செலவுகள், இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் முதலீட்டு உறுதிகள்' குறித்த விவரங்களை கோரியிருந்தனர்.

அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் அளித்திருக்கும் பதிலில் `` பிரதமரின் உயர் மட்டப் பயணங்கள், வெளிநாடுகளுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்தவும், இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தவும் பயன்படுகின்றன. தொழில் நுட்பம், கண்டுபிடிப்பு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, ஆற்றல் மற்றும் விநியோகச் சங்கிலி போன்ற துறைகளில் கூட்டாண்மையை ஆழப்படுத்த இப்பயணங்கள் உதவுகின்றன.

அதிகச் செலவான முக்கியப் பயணங்கள்:
 பிப்ரவரி 2025 (பிரான்ஸ்): ரூ.25.59 கோடி
 பிப்ரவரி 2025 (அமெரிக்கா): ரூ.16.54 கோடி
 ஜூலை 2025 (பிரேசில்): ரூ.17.72 கோடி
 ஏப்ரல் 2025 (சவுதி அரேபியா): ரூ.15.54 கோடி
 செப்டம்பர் 2024 (அமெரிக்கா): ரூ.15.33 கோடி
 ஜூன் 2024 (இத்தாலி): ரூ.14.36 கோடி


Nakkeeran 49 minutes ago
Home Flash News