i phone | ஐபோன் பிரியர்களுக்கு குட்நியூஸ்.. மடக்கும் வசதியுடன் புதிய டிசைனில் ஐபோன் 18 ப்ரோ அறிமுகம்.!
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் டியோ என்ற மடிக்கக்கூடிய முதல் ஐபோனை அறிமுகப்படுத்தியது. ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12, ஏர்பாட்ஸ் 5 ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டன.
முதன்முறையாக மடக்கும் வசதி கொண்ட செல்போனை அறிமுகம் செய்தது ஐபோன். உலகமே எதிர்பார்த்த ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ள ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய வகையிலான முதல் ஐபோனையும்
அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி அமெரிக்காவின் குபெர்டினோவில் நடைபெற்றது.
இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோனான 'ஐபோன் டியோ' அறிமுகம் செய்யப்பட்டது. மடிக்கப்பட்ட நிலையில் பாஸ்போர்ட் போன்ற வடிவத்திலும், திறக்கும்போது அகலமான திரையுடனும் இருக்கும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது.