தீயணைக்கும் பணிக்கு இடையே அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் கணக்கில் வராத பணம் என்று தெரிகிறது. நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா. இவர் தங்கியிருக்கும் அதிகாரப்பூர்வ பங்களாவில் கடந்த வாரம் ஹோலி விடுமுறையின் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தீயணைக்கும் பணிக்கு இடையே அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் கணக்கில் வராத பணம் என்று தெரிகிறது. இந்த சம்பவத்தின் போது நீதிபதி யஷ்வந்த வர்மா நகரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதி வீட்டில் இவ்வளவு கணக்கில் வராத பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. புயலை கிளப்பிய விவகாரம்.. யார் இந்த யஷ்வந்த் வர்மா?
Source : Puthia Thalaimurai
1 day ago