South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற பேபி சஹானாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற பேபி சஹானாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை: “வீராங்கனை பேபி சஹானா ரவியின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த சாதனையைப் படைத்துள்ளார். அவரது வெற்றி தமிழகத்தின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும்” என்று முதல்வர் விஜய் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் - கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். வீராங்கனை பேபி சஹானா ரவியின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த சாதனையைப் படைத்துள்ளார். அவரது வெற்றி தமிழகத்தின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். அவர், எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

ஜப்​பானின் ஐச்​சி-நகோயா மாகாணத்​தில் 5-வது ஆசிய பாரா விளை​யாட்டு போட்டி கடந்த 18-ம் தேதி தொடங்கியது. வரும் 24-ம் தேதி வரை இந்த விளையாட்டு தொடர் நடை​பெறுகிறது.

இந்த தொடரில் இந்​தியா 11 விளை​யாட்​டுப் பிரிவு​களில் சுமார் 168 வீரர், வீராங்​க​னை​களு​டன் களமிறங்​கு​கிறது. கடந்த 2023-ம் ஆண்டு சீனா​வின் ஹாங்சோ நகரில் நடை​பெற்ற போட்​டி​யில் இந்​தி​யா​வில் இருந்து 303 பேர் பங்​கேற்​றிருந்​தனர். அப்​போது 29 தங்​கம், 31 வெள்​ளி, 51 வெண்​கலம் என மொத்​தம் 111 பதக்​கங்​களைக் கைப்​பற்​றி, பதக்​கப் பட்​டியலில் இந்​தியா 5-வது இடத்தை பிடித்து இருந்​தது.

📍 Pondicherry
📰 Hindu Tamil
🕒 11 days ago

Related News

தீபாவளி: அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு
தீபாவளி: அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு
14 பந்தில் 38 ரன்கள் அடித்த நடராஜன்.. ஆனாலும் UAE-யிடம் இந்தியா தோல்வி!
14 பந்தில் 38 ரன்கள் அடித்த நடராஜன்.. ஆனாலும் UAE-யிடம் இந்தியா தோல்வி!
தமிழ்நாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற ஃபைபர் இணைப்புகளுக்குகான மானியம்: மத்திய அரசு ஒப்புதல்
தமிழ்நாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற ஃபைபர் இணைப்புகளுக்குகான மானியம்: மத்திய அரசு ஒப்புதல்
⬅ Back
➕ Post Ad
To Ads ➡