புவி வெப்பமடைய அமெரிக்காவே முக்கியக் காரணம்: ஐ.நா எச்சரிக்கை
வாஷிங்டன்: பருவநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் பூமி அதிக அளவில் வெப்பமடையும் அபாயம் உருவாகியுள்ளதாகவும், இதற்கு அமெரிக்காவின் நடவடிக்கைகளே பிரதான காரணம் என்றும் ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் புதிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதும், அங்கு நிலக்கரி பயன்பாடு மற்றும் மின்சாரத் தேவை அதிகரித்ததும் இதற்குக் முக்கியக் காரணங்களாகும். உலக நாடுகள் அனைத்தும் தங்கள் வாக்குறுதிகளைச் சரியாக நிறைவேற்றினாலும், புவி வெப்பநிலை தற்போதைய அளவை விட மேலும் 1.2 டிகிரி செல்சியஸ் உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் கார்பன் உமிழ்வு 133 மில்லியன் டன்கள் அளவுக்கு அதிகரித்துள்ளது. பிற முக்கிய நாடுகள் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திய நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலகளாவிய வெப்ப அலைகள், வெள்ளப்பெருக்கு மற்றும் விவசாயப் பாதிப்புகளை மேலும் தீவிரமாக்கும் என்று விஞ்ஞானிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.