South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

முதல் டி20 போட்டியில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

முதல் டி20 போட்டியில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

கிறைஸ்ட்சர்ச்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, ஹேக்லி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 12.30க்கு தொடங்குகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

விமானப் பயணத்தின் களைப்பு தீர்வதற்குள்ளாகவே, இந்திய வீரகள் கிறைஸ்ட்சர்ச் ஹேக்லி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் டி20 போட்டியில் களமிறங்க வேண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இப்படி அவசரம் அவசரமாக அயர்லாந்து சென்று விளையாடிய டி20 தொடரில் இந்தியா 0-2 என்ற கணக்கில் அடி வாங்கியது.

நியூசிலாந்து போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில், மிகவும் சவாலான பருவநிலை மற்றும் ஆடுகளங்களில் விளையாட இருப்பது இந்திய அணி வீரர்களுக்கு நிச்சயம் நெருக்கடியாகவே இருக்கும். நியூசிலாந்து அணி இம்முறை முழு பலத்துடன் களமிறங்க உள்ளது, அந்த நெருக்கடியை இன்னும் அதிகரிக்கவே செய்கிறது.

📍 chennai
📰 Dinakaran Tamil
🕒 7 days ago

Related News

“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு
“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு
கைதிகள் தப்பினால் துப்பாக்கியால் சுடுங்கள்: சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு
கைதிகள் தப்பினால் துப்பாக்கியால் சுடுங்கள்: சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துளசிமணிக்கு அமைச்சர் பாராட்டு
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துளசிமணிக்கு அமைச்சர் பாராட்டு
⬅ Back
➕ Post Ad
To Ads ➡