பாகிஸ்தானில் சிலிண்டர் விலை 10 ஆயிரத்தைத் தாண்டியது! மக்கள் அதிர்ச்சி
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவடைந்து வரும் நிலையில், சமையல் சிலிண்டர் ஒன்றின் விலை அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 10 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.
இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு சிலிண்டர் விலை சுமார் ரூ.3500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் சமையல் எரிவாயு தேவையில் 75 சதவிகிதத்துக்கும் மேல் இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையில், ஈரான் - அமெரிக்கா போர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பாகிஸ்தான் முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரு கிலோ சமையல் எரிவாயு ரூ.750 ரூபாய்க்கு விற்கப்படுகறிது.
வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ.10 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. அதுவே நமது ரூபாய் மதிப்பில் ரூ.3,425 ஆக உள்ளது. இதனால் மக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.