South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

அதிபர் டிரம்ப் வழங்கிய விலக்குக்கு எதிராக நடவடிக்கை

அதிபர் டிரம்ப் வழங்கிய விலக்குக்கு எதிராக நடவடிக்கை

வாஷிங்டன்: உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து ரஷ்யாவை பொருளாதார ரீதியாக பணிய வைக்க அந்நாட்டின் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்து 2022ல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. தற்போது, அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடக்க உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சமாளிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அமெரிக்கா உட்பட உலகளாவிய சந்தைகளுக்கு டீசல் வழங்க ரஷ்யாவுக்கு அனுமதி அளிக்கும் விலக்கு ஒன்றை வழங்கினார்.

இதற்காக உக்ரைனில் ரஷ்யா போரை நிறுத்திவிட்டதாகவும் அதிபர் டிரம்ப் நாடாளுமன்றத்தில் சான்றளித்தார். இதைத்தொடர்ந்து ரஷ்ய டீசல் ஏற்றுமதிகள் அமெரிக்காவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் குழு, வங்கி, துறைமுக அதிகாரிகள் மற்றும் எரிபொருள் விநியோக நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளன. அதில், ரஷ்ய டீசலை இறக்குமதி செய்வது சட்ட நடவடிக்கை மற்றும் நாடாளுமன்ற விசாரணைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அமெரிக்க சட்டத்தை மீறி இறக்குமதிக்கு உதவும் நிறுவனங்கள் குற்றவியல் மற்றும் உரிமையியல் பொறுப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

உக்ரைனில் போர் நிற்காத போது, அங்கு ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு விட்டதாக அதிபர் டிரம்ப் சான்றளித்தது எம்பிக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் அளித்த விலக்கை தடுக்கும் வகையில் எம்பிக்கள் குழு எச்சரிக்கை கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

📍 chennai
📰 Hindu Tamil
🕒 1 day ago

Related News

“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு
“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு
முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த தமிழக அரசு ரூ.43 லட்சம் நிதி
முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த தமிழக அரசு ரூ.43 லட்சம் நிதி
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துளசிமணிக்கு அமைச்சர் பாராட்டு
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துளசிமணிக்கு அமைச்சர் பாராட்டு
⬅ Back
➕ Post Ad
To Ads ➡