South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

“மத்திய மாநில அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்” - மு. வீரபாண்டியன் அறிவிப்பு!

“மத்திய மாநில அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்” - மு. வீரபாண்டியன் அறிவிப்பு!

அரசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஒன்றிய மாநில அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்ச்யின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உட்பட தென் மாநிலங்களில் அரசி விலை கடுமையாக உயர்த்துள்ளது.

சன்னரசு அரிசி உட்பட அரிசி ரகங்களின் விலை 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இதனால் சில உயர்தர அரிசி ரகங்கள் கிலோ ரூ.100 வரை விற்பனையாகின்றன. இந்த விலை ஏற்றம் காரணமாக ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கிலோ ரூ.48-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை விலை, தற்பொழுது ரூபாய் 72 வரை விலை உயர்ந்துள்ளது. எத்தனால் தயாரிப்பிற்காக அதிக அளவில் கரும்பு பயன்படுத்தப்படுவதால் சர்க்கரை உற்பத்தி குறைந்து அதனால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 25 லட்சம் டன் கரும்பு எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலப்பு என்ற ஒன்றிய அரசின் கொள்கையே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

தற்போது தீபாவளி போன்ற விழா காலங்கள் நெருங்கி வரும் காலத்தில் சர்க்கரை தேவை அதிகரிக்கும். இந்நிலையில் அதன் விலை ஏற்றம் சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். சர்க்கரை விலை உயர்வால் ஹோட்டல்களில் டீ, காபி விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, வணிக நிறுவனங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. அதன் காரணமாக சாலையோர தேநீர் கடைகளில் கூட, டீ, காபி விலை ரூ.20 முதல் 30 வரை உயர்ந்தது. தற்போது அரிசி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு, தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் பதுக்கல், ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களால் இந்த விலையேற்றம் நடந்துள்ளது.

பொன்னி அரிசி ரூபாய் 90க்கும் மேல் அதிகரித்துள்ளது. இட்லி அரிசி ரூபாய் 35 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் பருப்பு வகைகளும் விலை உயர்ந்துள்ளன. உளுத்தம் பருப்பு கிலோ ரூபாய் 120 லிருந்து 150 ஆகவும், கடலைப் பருப்பு 80லிருந்து 100 ஆகவும், தனியா 160 லிருந்து ரூ.250 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசும் மாநில அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் நியாய விலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும்.

ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் 03.11.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறும். இதில் அனைத்து பகுதி மக்களும் கலந்து கொள்ளுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு கேட்டுக்கொள்கிறது”எனத் தெரிவித்துள்ளார்.

📍 Pondicherry
📰 Nakkheeran
🕒 1 hr ago

Related News

மீண்டெழுந்த சரத்பவார், அகிலேஷ் யாதவ்: சட்டமேலவை தேர்தலில் நாக்பூர், வாரணாசியை இழந்த பாஜக
மீண்டெழுந்த சரத்பவார், அகிலேஷ் யாதவ்: சட்டமேலவை தேர்தலில் நாக்பூர், வாரணாசியை இழந்த பாஜக
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
Explainer: பிஎம் கிசான் 24வது தவணை நாளை வருகிறது: பயனாளி பட்டியலில் பெயர் உள்ளதா? எப்படி அறிவது?
Explainer: பிஎம் கிசான் 24வது தவணை நாளை வருகிறது: பயனாளி பட்டியலில் பெயர் உள்ளதா? எப்படி அறிவது?
⬅ Back
➕ Post Ad
To Ads ➡