South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

சென்னையில் ரூ.5,000 கோடி நிதி மோசடி புகாரில் கூட்டுறவு சங்க தலைவர் கைது

சென்னையில் ரூ.5,000 கோடி நிதி மோசடி புகாரில் கூட்டுறவு சங்க தலைவர் கைது

சென்னை: ரூ.5,000 கோடி நிதி மோசடி புகாரில், பாரத் லஜ்னா மல்டி-ஸ்​டேட் ஹவுசிங் கூட்​டுறவு சங்​கத்​தின் நிறு​வனத் தலை​வர் ஆர்.பிரேம்​குமாரைக் கேரள போலீ​ஸார் சென்​னை​யில் கைது செய்​தனர்.

பாரத் லஜ்னா மல்டி-ஸ்​டேட் ஹவுசிங் கூட்​டுறவு சங்​கம் (பிஎல்​எம்) அதிக வரு​மானம் தரு​வ​தாகக் கூறி முதலீட்​டாளர்​களிடம் பணம் வசூலித்​த​தாகப் புகார்​கள் எழுந்​தன. முதலீட்​டுத் திட்​டங்​களின் கால அவகாசம் முடிந்த பிறகும், சிலர் தங்​களது பணத்​தைத் திரும்​பப் பெற முடி​யாமல் தவித்​த​தாகக் கூறப்​படு​கிறது

முதலீட்​டாளர்​களிடம் வசூலிக்​கப்​பட்ட பணம், தனிப்​பட்ட வங்​கிக் கணக்​கு​கள், குடும்ப உறுப்​பினர்​கள் மற்​றும் பிற தொழில் நிறு​வனங்​களுக்​குத் திருப்​பி​விடப்​பட்​டதா என்​பது குறித்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

மேலும், அந்​தப் பணத்​தின் மூலம் ஓட்​டல்​கள், தங்​கும் விடுதி​கள், திரையரங்​கு​கள் உள்​ளிட்ட சொத்​துகள் வாங்​கப்​பட்​ட​தாகவும் குற்​றச்​சாட்​டுகள் எழுந்​துள்​ளன. இந்​தப் புகார்​கள் தொடர்​பாக அமலாக்​கத் துறையும் பண மோசடி மற்​றும் ஹவாலா பரிவர்த்​தனைகள் குறித்து விசா​ரித்து வரு​கிறது.

இந்​நிலை​யில், பாரத் லஜ்னா மல்டி-ஸ்​டேட் ஹவுசிங் கூட்​டுறவு சங்​கத்​தின் (பிஎல்​எம்) நிறு​வனத் தலை​வர் பிரேம் குமாரைக் கேரள மாநிலம் கோழிக்​கோடு குற்​றப்​பி​ரி​வின் பொருளாதார குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் சென்னை விருகம்​பாக்​கத்​தில் நேற்று கைது செய்​தனர். ரூ.5,000 கோடி வரையி​லான நிதி மோசடி குற்​றச்​சாட்​டில் இந்த நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

கைது செய்​யப்​பட்ட பிரேம்​குமார் திடீரென 2 முறை மயங்கி விழுந்​தார். உடனடி​யாக அவரை சென்னை ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்.

அங்கு மருத்​து​வர்​கள் பரிசோதித்து, அவரது உடல்​நிலை சீராக உள்​ளதை உறுதி செய்​தனர். பின்​னர் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி அனுமதி பெற்ற பின்​னர், பிரேம்​குமாரைப் போலீ​ஸார் கேரளா அழைத்து சென்​றனர்.

பல துறை வளர்ச்சி

கேரள மாநிலம் திரு​வனந்​த​புரத்​தில் பிறந்த பிரேம்​குமார், சென்​னை​யில் வளர்ந்​தவர். அவரது தந்தை சென்னை துறைமுகப் பொறுப்​புக் கழகத்​தில் பணி​யாற்றி உள்​ளார்.

கூட்​டுறவு வங்​கி​யில் கடன் பெறு​வதில் ஏற்​பட்ட சிரமத்​தைத் தொடர்ந்து, சாதா​ரண மக்​களுக்கு நிதி​யுதவி வழங்​கும் அமைப்பை உரு​வாக்க வேண்​டும் என்ற எண்​ணத்​தில், நண்​பர்​களின் ஆதரவுடன் 2006-ம் ஆண்டு பிஎல்​எம் அமைப்​பைத் தொடங்கி உள்​ளார்.

பல மாநில கூட்​டுறவுச் சங்​கங்​கள் சட்​டத்​தின் கீழ் சென்​னை​யில் தொடங்​கப்​பட்ட இந்த அமைப்பு, வீட்டு வசதி மற்​றும் நில மேம்​பாட்​டைத் தாண்டி பல்​வேறு தொழில்​களில் விரிவடைந்​தது. தமிழகம், கேரளா, புதுச்​சேரி, ஆந்​திரா ஆகிய மாநிலங்​களி​லும் செயல்​பட்​டது.

மேலும், இந்த நிறு​வனத்​தின் தொழில்​களில் பயணிகள் போக்​கு​வரத்து, சிமெண்டு உற்​பத்தி, நகை விற்​பனை, ஓட்​டல்​கள், தங்​கும் விடுதி​கள், உயி​ரிவாயு உற்​பத்தி ஆகியவை அடங்​கும். அதோடு கல்வி மற்​றும் மருத்​து​வத் துறைகளி​லும் திட்​டங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.
லஞ்ச புகார்

பிரேம்​குமார் கைது செய்​யப்​படுவதற்கு 2 நாட்​களுக்கு முன்பு, திரு​வனந்​த​புரத்​தில் விசா​ரணை அதி​காரி​களுக்கு லஞ்​சம் கொடுத்து விசா​ரணை​யைத் தடுக்க முயன்​றதாக கூறப்​படு​கிறது. இதையடுத்து, அவரைக் கண்​காணித்த அதி​காரி​கள் சென்னை வந்து கைது செய்​துள்​ளனர்.

இந்த வழக்​கில் சமரசம் செய்​யக் கூடாது என்​ப​தில் கேரள முதல்​வர் வி.டி.சதீசன் உறுதி​யாக இருந்​த​தாகவும் அதன் அடிப்​படை​யிலேயே இந்த நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

📍 Tamil Nadu
📰 Hindu Tamil
🕒 9 hrs ago

Related News

“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு
“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துளசிமணிக்கு அமைச்சர் பாராட்டு
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துளசிமணிக்கு அமைச்சர் பாராட்டு
ஊக்க பொன்மொழிகள்
ஊக்க பொன்மொழிகள்
⬅ Back
➕ Post Ad
To Ads ➡