South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ராம்லீலா மைதான பொதுக் கூட்டத்துக்கு முன் டெல்லியில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஊர்வலம்: ராகுல் காந்தி அறிவிப்பு

ராம்லீலா மைதான பொதுக் கூட்டத்துக்கு முன் டெல்லியில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஊர்வலம்: ராகுல் காந்தி அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லி ராம்லீலா மைதான பொதுக்கூட்டம் நடப்பதற்கு முன் எதிர்க்கட்சிகள் சார்பில் ஊர்வலம் நடக்கும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என கோரி இந்தியா கூட்டணி சார்பில் 1ம் தேதி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் மாபொரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதில் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் என்னிடம் கேளுங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று கூறுகையில் நவ.1ம் தேதி பொதுக்கூட்டத்தையொட்டி டெல்லி மின்டோ சாலையில் இருந்து கன்னாட்பிளேஸ் வரைக்கும் ஊர்வலம் நடக்கிறது.

பிற்பகலில் புறப்படும் இந்த ஊர்வலம் ராம்லீலா மைதானத்தில் வந்தடையும் என தெரிவித்தார். ராம்லீலா மைதான பொதுக்கூட்டத்தையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் ரோகித் ராஜ்பீர் தெரிவித்தார்.

📍 Tirunelveli
📰 Dinakaran Tamil
🕒 1 day ago

Related News

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்: 30,000 பேருக்கு 5 ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்: 30,000 பேருக்கு 5 ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு
கோவை மாநகரில் குற்றங்களைத் தடுக்க ‘நடை ரோந்து’ திட்டம்!
கோவை மாநகரில் குற்றங்களைத் தடுக்க ‘நடை ரோந்து’ திட்டம்!
இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி - டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்
இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி - டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்
⬅ Back
➕ Post Ad
To Ads ➡