South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இஸ்லாம் மதத்துக்கு மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் என்ற அந்தஸ்தை கோர முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த ஜூன் 25ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தின.

இந்த போராட்டங்களின்போது, தீர்ப்பை வழங்கிய அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஒருவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பிரசாரங்கள் செய்ததாகவும், நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் அவமதிக்கும் வகையில் பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்துவதையும், சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் தடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த ஆர்.கார்த்திகேயன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, உண்மையான நீதித்துறை சுதந்திரம் என்பது சட்டம் மற்றும் தகவல்களின் அடிப்படையில் நீதிபதிகள் சுதந்திரமாக முடிவெடுப்பதுதான். நீதித்துறை சுதந்திரம் அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதித்துறை முடிவுகளுக்காக தனிப்பட்ட முறையில் நீதிபதிகளை அவதூறு செய்வது சட்ட நடைமுறையின் வேரையே பாதிக்கச் செய்யும்.

நீதிமன்ற தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவிக்க குடிமக்களுக்கு உரிமை இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நீதிபதிகளை தாக்கிப் பேச முடியாது. அது பேச்சு சுதந்திர வரம்புக்குள்ளும் வராது. அனைத்து பொது விவாதங்களுக்கும், அமைதியாக கூடுவதற்கும் பொத்தாம் பொதுவாக தடை விதித்துவிட முடியாது. நீதித்துறை நேர்மை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் பேசுவது, டிஜிட்டல் தளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவிடப்படவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

நீதித்துறை சார்ந்த முடிவுகளை எதிர்த்து பொதுக்கூட்டங்கள், பேரணி, போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி அளிக்கும் விண்ணப்பங்களை போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும். நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் அவதூறு செய்யும் விதமாக பொதுக்கூட்டங்களோ, பேரணியோ நடத்த எந்த அனுமதியும் வழங்கக்கூடாது.

அனுமதிக்கப்பட்ட கூட்டங்கள் நீதிபதிகள் மீது தனிநபர் தாக்குதல் நடத்தும் வகையில் மாறினால் அதிகாரிகள் உடனடியாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதிகளுக்கு தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் பதிவிடப்படவில்லை என்பதை உறுதி செய்ய சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

சட்டவிரோதமாக செயல்படுபவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீதிபதிக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் புலன் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

📍 Chennai
📰 Dinakaran Tamil
🕒 1 day ago

Related News

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்: 30,000 பேருக்கு 5 ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்: 30,000 பேருக்கு 5 ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு
கோவை மாநகரில் குற்றங்களைத் தடுக்க ‘நடை ரோந்து’ திட்டம்!
கோவை மாநகரில் குற்றங்களைத் தடுக்க ‘நடை ரோந்து’ திட்டம்!
இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி - டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்
இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி - டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்
⬅ Back
➕ Post Ad
To Ads ➡