வங்காள விரிகுடாவில் மூழ்கிய சரக்கு கப்பல் - 2 மாலுமிகள் மீட்பு; 22 பேரை தேடும் பணி தீவிரம்
புவேனஸ்வர்: ஒடிசாவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட சரக்கு கப்பல் வங்காள விரிகுடாவில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் பயணித்த 2 மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான 22 பேரை தேடும் பணியில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடேலார காவல்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
பனாமா நாட்டுக்கு சொந்தமான ‘எம்வி ஓசியன் வின்னர்’ என்கிற சரக்கு கப்பல், ஒடிசாவிலிருந்து 1,700 டன் இரும்புத் தாது கனிமங்களை எடுத்துக்கொண்டு, கடந்த வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் சீனாவை நோக்கி புறப்பட்டது. இந்தக் கப்பலில் சீனாவைச் சேர்ந்த 20 பேர், மியான்மரைச் சேர்ந்த 3 பேர் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என 24 மாலுமிகள் இருந்தனர்.