ஜப்பான் ஓபனில் ஜோஷ்னா சாம்பியன்!
புதுடெல்லி: ஜப்பானின் யோஹமா நகரில் ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 117-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள எகிப்தின் ஹயா அலியுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோஷ்னா சின்னப்பா 11-5, 11-9, 6-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு சுமார் ரூ.13.29 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.