ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7வது முறையாக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா..!!
நியூயார்க்: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது. உலகம் முழுவதும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காகவும் மற்றும் பாதுகாப்பதற்காகவும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பு நாடுகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில், இந்தியா உள்பட 14 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.