சாலையோரங்களில் தற்காலிகமாக வைக்கப்படும் கொடிக்கம்பங்களுக்கு தலா ரூ.1,000 கட்டணம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகளின் நிகழ்வுகளுக்காக சாலையோரங்களில் தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதி கோருபவர்களிடம் ஒரு கொடி கம்பத்துக்கு தலா ரூ.1,000 கட்டணமாக வசூலிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பொது இடங்கள் மற்றும் தேசிய - மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள், சங்கங்களின் கொடிக்கம்பங்களை ஏப்.28-க்குள் அகற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.