சென்சார், உணர்ச்சியுடன் பேசும் போன் வந்தாச்சு... ஹானரின் 'ரோபோட் போன்' அறிமுகம்!
ஹானர் நிறுவனம் தனது மேஜிக்8 புரோ வெளியீட்டு விழாவில், சாதாரண ஸ்மார்ட்போனை விட முற்றிலும் மாறுபட்ட "ரோபோட் போன்" என்ற புதிய தொழில்நுட்பக் கருத்தை (Concept Device) அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய தலைமுறை ஸ்மார்ட்போன்களை எதிர்பார்த்திருந்த தொழில்நுட்ப உலகில், ஹானர் நிறுவனம் முற்றிலும் எதிர்பாராத ஒரு சாதனத்தை அறிமுகப்படுத்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதன் மேஜிக்8 ப்ரோ வெளியீட்டு நிகழ்வின் முடிவில், ஹானர் நிறுவனம் புதிய வகைத் தொழில் நுட்பத்தைக் காட்சிப்படுத்தியுள்ளது. அதுதான்... "ரோபோட் போன்" (Robot Phone)! இது வெறும் மேம்படுத்தப்பட்ட ஒரு மாடல் அல்ல; செயற்கை நுண்ணறிவு (AI), ரோபாட்டிக்ஸ் மற்றும் மொபைல் வடிவமைப்பு ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து, இது ஒரு "புதிய வகை உயிரினம்" என்று ஹானர் தெரிவித்துள்ளது.