தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை: தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து வசதியில்லாத கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில், புதிய மினி பஸ் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக 2025 ஏப்ரலில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தனியார் பஸ் ஆப்பரேட்டர்கள் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, புதிய மினி பஸ் திட்டத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.