மாதவிடாய் விடுமுறைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை
பெங்களூரு: கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு மாதம் ஒருநாள் ஊதியத்துடன்கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 52 வயது வரையிலான பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அம்மாநில அரசு கடந்த நவம்பர் 20-ம் தேதி உத்தரவிட்டது.