வங்கதேசத்தில் தொடரும் பதற்றம்; விசா வழங்காமல் நிறுத்திய இந்தியா
வங்கதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இளைஞர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கொலையாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்யக்கோரி பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக ஒரு இந்திய இளைஞரும் தாக்குதலுக்குள்ளாகி கொல்லப்பட்ட சம்பவமும் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் வன்முறை சம்பவங்களால் போக்குவரத்து மட்டுமல்லாமல் பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.