அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் விலை உயர்ந்த புதிய ராமர் சிலை!!
லக்னோ : அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் விலை உயர்ந்த புதிய ராமர் சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது. தங்கம்போல ஜொலிக்கும் பிரமாண்ட சிலை வைரம், மரகதம் உள்பட விலை உயர்ந்த ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ரூ.30 கோடி மதிப்புள்ள ராமர் சிலை கர்நாடகாவைச் சேர்ந்த பக்தரால் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சிற்பக்கலை நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ராமர் சிலை 10 அடி உயாமும் 8 அடி அகலமும் கொண்டது.