ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 20,668 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவின் நாசிக் - சோலாப்பூர் இடையேயான மிகப்பெரிய ஆறு வழிச்சாலை மற்றும் ஒடிசாவில் தேசிய நெடுஞ்சாலை-326 விரிவாக்கம் என இரண்டு திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. 374 கி.மீ நீளம் கொண்ட 6 வழி பசுமைவழி விரைவுச்சாலைக்கு ரூ. 19,142 கோடியும், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு ரூ.1,526 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.