தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கலுக்கு ரூ.3,000 - இன்று முதல் டோக்கன்
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு போன்றவற்றுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு, வேட்டி - சேலை மற்றும் ரொக்கப் பணப் பரிசை தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. எனினும் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பணம்எதுவும் வழங்கவில்லை.