அரசு மருத்துவமனையில் காயமடைந்தவருக்கு தையல் போட்ட தூய்மைப் பணியாளர்: அன்புமணி கண்டனம்
அரசு மருத்துவமனை ஒன்றில் விபத்தில் சிக்கிய ஒருவரின் காயத்திற்கு தூய்மைப் பணியாளர் தையல் போட்ட சம்பவத்துக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணிப்பேட்டை மாவட்டம் கலவை மருத்துவமனையில், விபத்தில் சிக்கிய ஒருவரின் காயத்திற்கு தூய்மைப் பணியாளர் தையல் போட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் சீரழிவின் உச்சத்தை அடைந்து விட்டன என்பதற்கு இதை விட மோசமான சான்று இருக்க முடியாது.