ஜனவரி 22க்கு முன் இந்த காரை வாங்கினால்.. லட்சக்கணக்கில் காசை மிச்சப்படுத்தலாம்!
நிசான் மேக்னைட் தள்ளுபடி
ஜப்பானை தலைமையிடமாகக் கொண்ட கார் தயாரிப்பு நிறுவனமான நிசான், இந்திய சந்தையில் தனது பிரபலமான சப்-காம்பாக்ட் எஸ்யூவி நிசான் மேக்னைட் மீது புத்தாண்டை முன்னிட்டு பெரிய தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
ஜனவரி 1 முதல் மேக்னைட்டின் விலையை 3 சதவீதம் உயர்த்த திட்டமிட்டிருந்தாலும், தற்போது அந்த உயர்வின் தாக்கத்தை குறைக்கும் வகையில் கனிசமான சலுகைகளை நிறுவனம் வழங்கி வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. ஜனவரி 22க்கு முன் மேக்னைட் வாங்கினால், ரூ.1.20 லட்சம் வரை பலன்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.