இலவச விடியல் பயணம் விரிவாக்கம் முக்கிய அப்டேட்! மாற்றுத் திறனாளிகளுக்கு குட் நியூஸ்
Vidiyal Bus Scheme : தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று விடியல் பயணம். இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் பெண்கள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணிக்க முடியும். திருநங்கைகளுக்கும் இலவச விடியல் பயணம் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் பயணிக்கும் துணையாளர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவது தொடர்பான முக்கிய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதாவது, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், தமிழகத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் பயணிக்கும் ஒரு துணையாளரும் (Escort பயன்பெறும் வகையில் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டத்தை விரிவுபடுத்துதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், யாரெல்லாம் விடியல் பயணத்தில் இலவசமாக பயணிக்கலாம் என விளக்கப்பட்டுள்ளது.