“விஜய்க்காக பறந்து வரும் 3 லட்சம் வாக்குகள்; உலக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை” - செங்கோட்டையன்
த.வெ.க தலைவர் விஜய் விடுத்துள்ள அழைப்பை ஏற்று, மேலை நாடுகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் தமிழர்கள் தேர்தல் நாளில் தமிழகம் வந்து வாக்களிக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செல்வீரர் கூட்டத்தில் பங்கேற்று விட்டு அக்கட்சியின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், த.வெ.க தலைவர் விஜய், செயல்வீரர் கூட்டத்தில் உரையாற்றி இருக்கிறார், அவர் உரையைப் பொறுத்தவரை தெளிவாக தமிழகம் வளம் பெறுவதற்கு, தூய்மையான ஆட்சியை தமிழகத்தில் தருவதற்கு ஊழலற்ற ஆட்சியை தருவேன் என்று முழக்கமிட்டு இருக்கிறார் என குறிபிட்டார்.
அதை ஏற்றுத்தான் இந்தியாவிலும் பல நாடுகளில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏறத்தாழ 3 லட்சம் பேர் எப்பொழுது தேர்தல் வரப்போகிறது என்று தேர்தல் நாளை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் நாள் அறிவித்தவுடன் மேலை நாடுகளில் இருக்கக்கூடிய 3 லட்சம் பேர் தமிழகம் வந்து வாக்களிக்க உள்ளார்கள்” என்று கூறினார்.
மேலும், இது உலக வரலாற்றில் நம்முடைய தலைவர் விஜய் ஒருவருக்கு தான் இந்த புகழ் உள்ளது என தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.