புவியியல் அதிசயம்: பூமியில் இதுவரை மனிதன் பார்த்திராத புதிய கனிமம் கண்டுபிடிப்பு- தங்கம், நிக்கலை விட விலைமதிப்பற்றதா?
புவியியலாளர்களின் கூற்றுப்படி, பூமியின் ஆழத்தில் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெப்ப நீர் செயல்பாடுகளின் (Hydrothermal activity) போது, ஏற்கனவே இருந்த தாதுக்கள் உருகி புதிய அணுக்கட்டமைப்பில் உருவானதே இந்த ஜின்சியுயைட்.
நமது பூமி இன்னும் பல ரகசியங்களைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது என்பதற்குச் சான்றாக, தெற்கு சீனாவின் குவாங்ஷி (Guangxi) பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் இதுவரை அறிவியலால் அறியப்படாத ஒரு புதிய கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீன புவியியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட இந்தக் கனிமத்திற்கு 'ஜின்சியுயைட்' (Jinxiuite) எனப் பெயரிடப்பட்டுள்ளது. சர்வதேச கனிமவியல் சங்கம் (IMA) இந்தக் கண்டுபிடிப்பை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
யார் இந்த 'ஜின்சியுயைட்'?
இந்தக் கனிமம் சாதாரணமாகக் கிடைக்கக்கூடியது அல்ல. இது நிக்கல், பிஸ்மத், ஆன்டிமனி, ஆர்சனிக் மற்றும் கந்தகம் (Sulfur) ஆகிய தனிமங்களின் அபூர்வ கலவையாகும்.