கடல்சார் பாதுகாப்பு முதல் பயங்கரவாத எதிர்ப்பு வரை: இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம் தயார்
ஜப்பான் மற்றும் தென்கொரியாவிற்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஆசியாவின் மூன்றாவது நாடாக இந்தியா இருக்கும்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாப்பு மற்றும் ராணுவக் கூட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா வந்த ஐரோப்பிய தலைவர்கள் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெழுத்தாகிறது.
இந்த ஒப்பந்தம் கடல்சார் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, விண்வெளி பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும். ஜப்பான், தென்கொரியாவிற்கு பிறகு இத்தகைய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஆசியாவின் மூன்றாவது நாடு இந்தியா ஆகும்.