... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#பறவைக் காய்ச்சல்: தமிழ்நாட்டு மக்களுக்கு 12 முக்கிய எச்சரிக்கைகள் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு

Bird flu : தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளா மாநிலம் கோட்டையம் மாவட்டத்தில் காடை மற்றும் கோழிகளிலும், ஆழப்புலா மாவட்டத்தில் கோழி மற்றும் வாத்துகளிலும் மற்றும் தமிழ்நாடு சென்னை அடையாறில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடாந்து கரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய விளக்கம் ஒன்றையும், முன்னெச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை.

கால்நடை பராமாரிப்புத்துறையின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகள் மற்றும் புறக்கடைக்கோழிகளில் நேரில் பார்வையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிவிரைவு செயலாக்க குழுக்கள் (RRT- Rapid Response Team) அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

1. கேரளாவில் இருந்து வாத்து, கோழிகள், கோழிக்குஞ்சுகள், முட்டை, கோழி தீவனம், தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்கக் கூடாது.

2. கடந்த 1 மாதத்திற்குள்ளாக கேரளாவில் இருந்து குஞ்சு பொறிப்பதற்கான முட்டைகள், வாத்துகள் மற்றும் கோழிகள் ஏதேனும் வாங்கப்பட்டிருந்தால் அவற்றை கண்டறிந்து அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

3. கோழிப்பண்ணைகளுக்குள் செல்பவர்களும், வெளியே வருபவர்களும் கிருமி நாசினியால் கால்களை சுத்தம் செய்த பின்னரே செல்ல வேண்டும்.

4. கோழிப்பண்ணையினுள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி (Chorine Di-Oxide) மருந்து தெளித்த பின்னரே அனுமதிக்க வேண்டும்.

5. கோழிப்பண்ணையில் அசாதாரண இறப்பு ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை பராமாரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

6. பண்ணையாளார்கள் வேறு பண்ணைகள் மற்றும் சரணாலயங்களுக்கு செல்வதையும் மற்றும் தங்கள் பண்ணைக்குள் பார்வையாளார்களை அனுமதிப்பதையும் தவிர்க்க வேண்டும்

7. பிற மாநிலத்திற்கு முட்டைகளை எடுத்து செல்வதற்கு கண்டிப்பாக காகித அட்டை பெட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேற்படி காகித அட்டைகளை எக்காரணத்தை கொண்டும் திரும்ப எடுத்து வரக்கூடாது.

8. கோழிப்பண்ணைக்குள் இதர கோழிகள் அல்லது வனப்பறவைகள் நுழைவதை அறவே தடுக்க வேண்டும். கொக்கு, நாரை போன்ற நீர்ப்பறவைகள் நுழைந்து விடாமல் தடுக்கும் வகையில் பண்ணை வளாகத்திற்குள் நீர் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

9. கோழிகள், வாத்துகள் மற்றும் வான்கோழிகள் போன்ற பல்வேறு வகை பறவையினங்களை ஒரே பண்ணணையில் வைத்து பராமாpப்பதை தவிர்க்க வேண்டும்.

10. பறவைகளின் எச்சம் உள்ள இடங்களில் சிறுவர்களை விளையாட விட வேண்டாம். அவ்விடங்களில் காலணிகள் அணியாமல் நடக்க வேண்டாம்.

11. பொதுமக்கள் இறந்த காகங்கள் மற்றும் பறவைகளை கையுறை அணியாமல் தொட வேண்டாம்.

12. சமையலறை மற்றும் இறைச்சிக் கூடத்தில் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

1 hour ago

Home Flash News