... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#சேலத்தில் விஜய் பேசியதை தொடர்ந்து தவெக வெளிட்ட முக்கிய அறிவிப்பு!

சேலத்தில் விஜய் பேசியதை தொடர்ந்து தவெக வெளிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளை தீவிர படுத்தியுள்ளன. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் அடுத்தடுத்து மக்கள் சந்திப்புகளை நடத்த திட்டமிட்டு வருகிறது. சேலத்தில் நேற்று பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக தீவிரமாக செய்யப்பட்டிருந்தன. கியூஆர் கோடு உள்ள அனுமதி சீட்டு வைத்திருந்த நிர்வாகிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் விஜய் பேசியுள்ளது தமிழக அரசியலில் பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தி உள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்து விஜய் பேசியிருந்தார்.

விஜய் பேச்சு

 விஜய் சேலத்தில் பேசுகையில்," நமது இலக்கு தனிப்பெரும்பான்மை மட்டுமே. நாம் யாருடைய முதுகிலும் சவாரி செய்ய வேண்டிய அவசியமில்லை. மக்களாகிய எஜமானர்கள் நம்மோடு இருக்கிறார்கள். நான் அன்று ஆட்சியில் பங்கு தருவேன் என்று சொன்னது, எதிரணிகளை சிதறடிக்கவும், அவர்களின் வியூகங்களை குழப்பவும் நான் வீசிய அரசியல் குண்டு. அது பல இடங்களில் சரியாகவே வெடித்துள்ளது. இன்று பல கட்சிகள் அந்த குழப்பத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. ஆனால், நம்மை பொறுத்தவரை பாதை ஒன்றுதான், அது வெற்றியின் பாதை. ஊழல் மலிந்துவிட்ட இந்த ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள். அவர்களுக்கு தேவை ஒரு நேர்மையான மாற்று. அந்த மாற்று நாம்தான். ஸ்டாலின் அவர்கள் பதற்றத்தில் இருக்கிறார் என்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது. அவர்கள் 5,000 ரூபாய் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். அது உங்கள் பணம் தான். ஆனால் ஓட்டு போடும்போது மட்டும் நம் சின்னமான விசில் ஞாபகம் வர வேண்டும்" என்று பேசி உள்ளார்.

விருப்ப மனுவை சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு

 சேலம் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கழகத் தோழர்களுக்கு வணக்கம். வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான கடைசித் தேதி இன்று (14.02.2026) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலான கழகத் தோழர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர்.

எனவே தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, வரும் 20ஆம் தேதி (20.02.2026) வரை கழகத் தோழர்கள் தங்களது விருப்ப மனுவைத் தலைமை நிலையச் செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க அதுவே கடைசி நாள் ஆகும். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Source : Zee News Tamil

1 hour ago

Home Flash News