... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#தகுதிச் சான்றிதழ் கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

தகுதிச் சான்றிதழ் கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

தமிழகத்தில் லாரி மற்றும் பேருந்துகளுக்கான தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்புக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து, வரும் 25-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ், போக்குவரத்துத் துறையின் இந்த திடீர் கட்டண உயர்வு லாரி உரிமையாளர்களைப் பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளதாகத் தெரிவித்தார். 
குறிப்பாக, 15 ஆண்டுகளுக்கு மேலான பயன்பாட்டில் உள்ள லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கான தகுதிச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதீத கட்டண உயர்வால் சிறு மற்றும் குறு லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனங்களைப் பராமரிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்தச் சூழலால் தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் லாரிகள் ஏற்கனவே இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய பொருளாதாரச் சூழலில் இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்தி சான்றிதழ் பெறுவது சாத்தியமற்றது என்பதால், லாரி உரிமையாளர்கள் இந்தப் போராட்ட முடிவை எடுத்துள்ளனர்.

முதற்கட்டமாக வரும் 25-ஆம் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்றும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கருதி குடிநீர் மற்றும் பால் விநியோகிக்கும் லாரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இருப்பினும், அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய பேச்சுவார்த்தை நடத்தி கட்டண உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளும் நிறுத்தப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெறாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் சரக்குப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Source : Indian Express Tamil

9 hours ago

Home Flash News