ஏலியன் குறித்த ரகசிய கோப்பு... டிரம்ப் சொன்ன முக்கிய சீக்ரெட்
ஏலியன் குறித்த ரகசிய கோப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய சீக்ரெட் ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஏலியன்கள் (Aliens) அல்லது வேற்று கிரக வாசிகள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். பிரபஞ்சத்தின் பிற பகுதிகளில் வாழக்கூடிய நுண்ணுயிரிகள் முதல் மேம்பட்ட உயிரினங்கள் வரையிலான வேற்று கிரக வாழ்க்கையைக் இது குறிக்கிறது. ஆனால், அவற்றை பெரிதாக நம்பியிருக்க மாட்டோம்.
மேலும், ஏலியன்கள் குறித்து எந்த ஒரு உறுதியான ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை. இருந்தாலும் விஞ்ஞானிகள் பலர் ஏலியன்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவே தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,
அமெரிக்கா வசமுள்ள ஏலியன்கள் குறித்த தரவுகள், அடையாளம் தெரியாத வான்வெளி நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் பற்றிய ரகசியக் கோப்புகளை பொதுவெளியில் வெளியிட உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என ஒபாமா பேசி இருந்த நிலையில், அதுகுறித்த தரவுகளை ரகசியப் பட்டியலிலிருந்து நீக்கி வெளியிடும் பணியை தொடங்க அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவு அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.