... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#மாநில அளவிலான லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

எப்.சி. கட்டண உயர்வை நிறுத்திவைக்க உத்தரவு: மாநில அளவிலான லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

நாமக்கல்: தமிழ்​நாடு மாநில லாரி உரிமை​யாளர்​கள் சம்​மேளன தலை​வர் தனராஜ் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய சாலைப் போக்​கு​வரத்து அமைச்​சகம், இருசக்கர வாக​னம், கார், லாரி​கள் உள்​ளிட்ட அனைத்து வாக​னங்​களுக்​கும் டிச. 17 முதல் தகு​திச் சான்​றிதழ் கட்​ட​ணத்தை (எப்​.சி.) உயர்த்தி அறி​வித்​தது.

வாக​னத்​தின் தயாரிப்பு ஆண்டை அடிப்​படை​யாக கொண்டு எப்.சி. கட்​ட​ணம் பல மடங்கு உயர்த்​தப்​பட்​டது. பல மாநிலங்​கள் கட்டண உயர்வை நிறுத்தி வைத்​துள்ள நிலை​யில், தமிழகத்​தி​லும் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்​டும் என்று முதல்​வர், அமைச்​சர்​கள் மற்​றும் அதி​காரி​களிடம் வேண்​டு​கோள் விடுத்​தோம்.

எங்​கள் கோரிக்கை ஏற்​கப்​பட​வில்​லை. உயர்த்​தப்​பட்ட கட்​ட​ணத்தை செலுத்தி எப்​.சி. பெற முடி​யாமல் மாநிலம் முழு​வதும் ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட லாரி​கள் ஆங்​காங்கு நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த நிலை​யில், கடந்த 17-ம் தேதி நாமக்​கல்​லில் நடை​பெற்ற சம்​மேளன செயற்​குழுக் கூட்​டத்​தில், தமிழகத்​தில் எப்​.சி. கட்டண உயர்வை திரும்​பப் பெறக்​கோரி பிப். 25 முதல் மாநிலம் முழு​வதும் கால​வரையற்ற வேலைநிறுத்​தப் போராட்​டம் நடத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது.

லாரி​கள் வேலைநிறுத்​தப் போராட்​டம் அறிவிக்​கப்​பட்ட 8 மணி நேரத்​தில், 3 மாதங்​களுக்கு எப்​.சி.க்கு புதிய கட்​ட​ணம் வசூலிப்​பதை தற்​காலி​மாக நிறுத்​தி​வைத்​து, பழைய கட்​ட​ண​மான ரூ.800 மட்​டும் செலுத்தி லாரி​களுக்கு எப்​.சி. சான்று பெறலாம் என்று தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

மேலும், போக்​கு​வரத்து ஆணை​யர் மற்​றும் சம்​மேளன நிர்​வாகி​கள் அடங்​கிய குழு ஏற்​கெனவே அமைக்​கப்​பட்​டுள்​ள​தால், அக்​குழு​வின் கூட்​டத்​தில் 3 மாதத்​தில் எப்​.சி. கட்​ட​ணம் நிர்​ண​யிப்​பது தொடர்​பாக பேசி முடிவு செய்​ய​லாம் என்​றும் மாநில போக்​கு​வரத்து ஆணை​யர் உறு​தி​யளித்​துள்​ளார்.

எனவே, வரும் 25-ம் தேதி முதல் நடை​பெற​விருந்த லாரி​கள் வேலைநிறுத்​தப் போராட்​டம் தள்ளி வைக்​கப்​படு​கிறது. லாரி​கள் வழக்​கம்​போல இயங்​கும். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News