... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி

எனது தலையீடு இல்லையென்றால் இந்தியா உடனான போரில் பாகிஸ்தான் பிரதமர் உயிரிழந்திருப்பார் : அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட 8 போர்களை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2025ம் ஆண்டு மே 7ம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படை தாக்குதலை நடத்தியது. மே 10ம் தேதி வரை நீடித்த இந்தப் போர் பதற்றம், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை இயக்குநர்களின் நேரடிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் தனது தனிப்பட்ட தலையீடு இருந்ததாகக் கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

வாஷிங்டனில் அவர் ஆற்றிய உரையில், ‘இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் வெடித்திருக்கும். அதை நான் தடுத்து நிறுத்தினேன். எனது தலையீடு இல்லையெனில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கொல்லப்பட்டிருப்பார். அவரது உயிரை காப்பாற்றியுள்ளேன். போரை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தானில் 3.5 லட்சம் மக்கள் பலியாகி இருப்பார்கள் என்று ஷேபாஸ் ஷெரீப் என்னிடம் கூறினார். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் என்னிடம் கேட்டது. இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட 8 போர்களை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தியுள்ளேன்,"எனத் தெரிவித்தார்.

டிரம்ப்பால் 'தடுத்த நிறுத்தப்பட்ட' 8 போர்கள்

Source : Dinakaran

1 hour ago

Home Flash News