ஈரான் தாக்குதல், பாதுகாப்பு அச்சுறுத்தல்;14 நாடுகளில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்கா அறிவுறுத்தல்
அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பதிலுக்கு ஈரான், மற்ற நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 14 நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவித்துள்ளது.
ஈரானின் தாக்குதலில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டி, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று (மார்ச் 3) அதிகாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரான், பஹ்ரைன், எகிப்து, ஈராக், இஸ்ரேல், காசா, மேற்குக் கரை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அமெரிக்க குடிமக்கள் வணிக ரீதியான போக்குவரத்து மூலம் உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் உதவிச் செயலாளர் மோரா நம்தார் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், காசா, குவைத், லெபனான், ஓமன், கத்தார், சவூதி அரேபியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து கிடைக்கும் வணிக ரீதியான போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்துகிறது
வெளியேறுவதற்கு வெளியுறவுத்துறையின் உதவி தேவைப்படும் அமெரிக்கர்கள், எங்களை 24/7 தொடர்புகொள்ளலாம்: +1-202-501-4444 (வெளிநாட்டிலிருந்து) மற்றும் +1-888-407-4747 (அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து). அருகிலுள்ள அமெரிக்க தூதரகத்திடமிருந்து சமீபத்திய பாதுகாப்புத் தகவல்களைப் பெற http://step.state.gov என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும் என்று குறிப்பிட்டுள்ளார்.