10 மணி நேரம் அடைக்கப்பட்ட திருப்பதி கோயில்... ஆனால் உண்டியலில் ரூ.4.46 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் கோயில் நடை அடைக்கப்பட்டிருந்தாலும் உண்டியலில் ஒரே நாளில் ரூ.4. 46 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சந்திரகிரகணத்தை ஒட்டி நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 7 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. இதனால் சுமார் 10 மணி நேரம் கோயில் மூடியிருந்தாலும் நேற்று அதன் பிறகு கோயில் திறக்கப்பட்டு 27,300 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையாக ரூ 4.46 கோடி செலுத்தி இருந்தனர். 9,985 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கையாக செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள 4 அறைகளில் காத்திருப்பதால் இலவச தரிசனத்திற்கு 8 மணி நேரம் ஆகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.