ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்: வளைகுடா வாழ் இந்தியர்களுக்காக நாடு வாரியான அவசர உதவி எண்கள் அறிவிப்பு
ஈரான், இஸ்ரேல், ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உள்ளூர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் சூழல் காரணமாக வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், அங்கு வசிக்கும் மற்றும் பணியாற்றும் இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அல்லது அவசர உதவி தேவைப்படும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக நாடு வாரியான அவசர உதவி எண்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.
சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைப்பு
இந்தியாவில் உள்ள வெளியுறவு அமைச்சகம் சார்பில் ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். இதற்கான தொடர்பு எண்கள்:
கட்டணமில்லா எண்: 1800118797
மற்ற எண்கள்: +91 11 2301 2113, +91 11 2301 4104, +91 11 2301 7905
நாடு வாரியான தூதரக உதவி எண்கள்
பதற்றம் நிலவும் பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களைத் தொடர்பு கொள்ள கீழ்க்கண்ட எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:

முக்கிய அறிவுறுத்தல்கள்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்த பெரும்பாலான இந்திய மாணவர்கள், நகரத்திற்கு வெளியே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து, உணவு மற்றும் தங்குமிட வசதிகளையும் அரசு செய்து கொடுத்துள்ளது.
ஈரான், இஸ்ரேல், ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உள்ளூர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தூதரகங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும் இந்தியக் குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.