இரண்டு முக்கிய திட்டங்களுக்குப் பாதுகாப்பு கொள்முதல் வாரியம் பச்சைக்கொடி!
இந்திய விமானப்படையிடம் தற்போதுள்ள ரஷ்ய தயாரிப்புகளான An-32 மற்றும் Il-76 ரக விமானங்கள் மிகவும் பழமையானவை என்பதால், அவற்றுக்குப் பதிலாக 60 புதிய நடுத்தர ரகராணுவ போக்குவரத்து விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
Buy and Make’ திட்டத்தின் கீழ், 12 விமானங்கள் தயார் நிலையில் வாங்கப்படும் என்றும், மீதமுள்ள 48 விமானங்களை இந்தியாவில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
25 டன்களுக்கும் அதிகமான எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த விமானங்கள், எல்லைப் பகுதிகளில் உள்ள உயரமான மலைச்சிகரங்களுக்குப் போர் தளவாடங்களை விரைவாகக் கொண்டு செல்ல உதவும் என கூறப்படுகிறது.
இதுதவிர, உள்நாட்டிலேயே ஆளில்லா போர் ட்ரோன்களை வடிவமைத்து மேம்படுத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டத்திற்கும் பாதுகாப்பு கொள்முதல் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.