... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை வேறு பணிகளுக்கு அனுப்பக் கூடாது்

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை வேறு பணிகளுக்கு அனுப்பக் கூடாது: போக்குவரத்து கழகங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: அரசு போக்குவரத்து கழகத்​தில் ஆளும் கட்சி தொழிற்​சங்க நிர்​வாகி​கள் மாற்​றுப்​பணி என்ற பெயரில் வேலைக்​குச் செல்லாமல் சம்​பளம் பெறும் விவ​காரத்​தில் ஓட்​டுநர், நடத்​துநர்​களை வேறு பணி​களுக்கு அனுப்​பக் கூடாது என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அரசு போக்​கு​வரத்து தொழிலாளர் சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் கனகசுந்​தர் உயர் நீதி​மன்​றத்​தில் 2019-ல் தாக்​கல் செய்த மனு​வில், அரசு போக்​கு​வரத்​துக் கழக மதுரை மண்​டலத்​தில் மட்​டும் நூற்​றுக்​கணக்​கான ஓட்​டுநர், நடத்​துநர்​கள் தங்​கள் அசல் பணி​யைச் செய்​யாமல் நிர்​வாகப் பிரி​வில் பணி​யாற்றி வரு​கின்றனர்.

இதனால் பேருந்துகளை இயக்க போது​மான எண்​ணிக்​கை​யில் ஓட்​டுநர், நடத்​துநர்​கள் இல்​லாமல் இருப்​ப​தால் பேருந்து இயக்​கம் பாதிக்​கப்​படு​தாக​வும், ஓட்​டுநர், நடத்​துநர் பற்​றாக்​குறையை போக்க ஒப்​பந்த அடிப்​படை​யில் ஆட்​களை நியமித்து அரசு போக்​கு​வரத்து கழகத்​துக்கு செல​வீனத்தை அதகரித்​துள்​ள​தாக​வும் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை நீதிப​தி​கள் என்​.சதீஷ்கு​மார், எம்​.ஜோ​தி​ராமன் அமர்வு விசா​ரித்​தது. மனு​தா​ரர் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பிரபு ராஜதுரை, வழக்​கறிஞர் ஏ.ராகுல் வாதிடு​கை​யில், இந்த மனு முந்​தைய அதி​முக அரசுக்கு எதி​ராக தாக்​கல் செய்​யப்​பட்​டாலும், இந்த ஆட்​சி​யிலும் அதே நிலைமை தொடர்​கிறது.

இளநிலை உதவி​யாளர் பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட்​டதும் அந்த ஓட்டுநர்கள், நடத்​துநர்​கள் அவர்​கள் பணிக்கு திரும்ப அனுப்​பப்​படு​வர். அரசு போக்​கு​வரத்து கழகத்​தில் ஓட்​டுநர், நடத்​துநர்​கள் இனிமேல் வேறு பணி​களில் ஈடு​படுத்​தப்பட மாட்​டார்​கள் எனக் கூறப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: ஓட்​டுநர், நடத்​துநர்​களை வேறு பணி​யில் ஈடு​படுத்​தக் கூடாது என அரசாணை​யில் கூறப்​பட்​டுள்​ளது. இருப்​பினும் அவர்​களுக்கு வேறு பணி​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. பணி​யின்​போது அவர்​கள் ஊனமுற்​றால், அவர்​கள் பணி செய்​யத் தகு​தி​யற்​றவர்​கள் எனக் கண்​டறியப்​பட்​டால் தவிர அவர்​களை வேறு எந்​தப் பணி​யிலும் நியமிக்​கக் கூடாது.

ஓட்​டுநர், நடத்​துநர்கள் பணி தொடர்​பான அரசாணையை தீவிர​மாக அமல்​படுத்த வேண்​டும். எந்​தக் கட்​சி​யாக இருந்​தா​லும் ஆளும் கட்சியுடன் இணைக்​கப்​பட்ட எந்த வொரு தொழிற்​சங்​கத்​தை​யும் சேர்ந்த ஓட்​டுநர்​கள், நடத்​துநர்​களுக்கு இனிமேல் மாற்​றுப்​பணி என்ற பெயரில் நிர்​வாகப் பணி வழங்​கக்​ கூ​டாது.

இந்​த உத்​தரவை மீறி​னால்​ அவம​திப்​பு மனு ​தாக்​கல்​ செய்​ய தொழிலா​ளர்​கள்​ மற்றும் தொழிற்​சங்​கங்​களுக்கு உரிமை வழங்​கப்​படு​கிறது. இவ்​​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​வில்​ கூறி​யுள்​ளனர்​.

Source : Hindu Tamil

2 hours ago

Home Flash News