... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை

இந்தோனேசியா : 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை!

ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து, இந்தோனேசியாவும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. இது தொடர்பான புதிய அரசாணையில் அந்நாட்டு தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சர் மியூட்டியா ஹாஃபித் கையெழுத்திட்டுள்ளார்.

அரசியல் அறிவிப்புகள் இதன்மூலம், புதியதாக விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையானது வரும் மார்ச் 28 ஆம் தேதி முதல் அனைத்து டிஜிட்டல் தளங்களும் இந்தோனேசிய சட்டங்களுக்கான தங்களது இணக்கக் கடமைகளை நிறைவேற்றும் வரை கொஞ்சம் கொஞ்சமாக அமலாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, இந்தோனேசிய அமைச்சர் ஹாஃபித் கூறியதாவது, “எங்கள் நோக்கம் தெளிவானது. நமது குழந்தைகள் நாள்தோறும் உண்மையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். ஆபாச படங்கள், சைபர் தாக்குதல், ஆன்லைன் மோசடி முக்கியமாக போதைப் பொருளுக்கு அடிமையாவது ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source : News 7 Tamil

3 hours ago

Home Flash News