5 நிமிடத்தில் ரேஷன் கார்டு மாற்றம் திருத்தம் செய்ய சூப்பர் சான்ஸ்.! தேதி குறித்த தமிழக அரசு!
Ration Card: பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும். ஏழை எளிய மக்களின் பயனடையும் வகையில் நாடு முழுவதும் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றனர். இந்த கடைகளில் 2 கோடியே 25 லட்சத்தி 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன.
இதன் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மானிய விலையில் உணவு பொருட்களை வாங்கி வருகிறார்கள். ரேஷன் கார்டுகள் இருந்தால் மட்டுமே அரசின் திட்டங்களை பெற முடியும். குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டம், பொங்கல் பரிசு தொகுப்பு போன்றவைகள் ரேஷன் அட்டைகள் இருந்தால் மட்டுமே வாங்க முடியும். இந்நிலையில் ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் பெயர், முகவரி திருத்தம் உள்ளிட்ட குறைபாடுகளை சரி செய்ய முடியால் பொதுமக்கள் அலைந்து வருகின்றனர்.