மேற்காசிய போர் இந்தியர்களையும் கடுமையாக பாதித்துள்ளது: மக்களவையில் ராகுல் காந்தி உரை
டெல்லி: மேற்காசிய போர் இந்தியர்களையும் கடுமையாக பாதித்துள்ளது என மக்களவையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. இந்நிலையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக மக்களவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி; மேற்காசிய போர் இந்தியர்களையும் கடுமையாக பாதித்துள்ளது.
நாம் எடுக்க வேண்டிய முடிவுகளை அமெரிக்கா எடுக்க ஒன்றிய அரசு அனுமதிக்கிறதுஇந்திய விவகாரத்தில் வெளிநாட்டு அதிபர் ஏன் தலையிட வேண்டும்? ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்க அனுமதி தேவையில்லைநாம் எந்த நாட்டில் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை வேறொரு நாடு ஏன் முடிவு செய்ய வேண்டும்? சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏராளமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சாலையோர உணவகங்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; நிலைமை மோசமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.