... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
254.59 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்:

28,639 பயனாளிகளுக்கு 254.59 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தருமபுரி: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, பழங்குடியினர் நலத்துறை, பொது நூலகத்துறை ஆகிய துறைகளின் மூலம் 15.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட 33 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறைகளின் மூலம் 33.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 421 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

 இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 4,195 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகள். வருவாய்த் துறையின் சார்பில் 1,328 பயனாளிகளுக்கு இலவச 69 வீட்டுமனைப் பட்டாக்கள். சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிவாரண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், 40 பயனாளிகளுக்கு தேய்ப்பு பெட்டிகள். 

கூட்டுறவுத் துறையின் சார்பில் 630 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு கடன், பயிர்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடனுதவிகள், மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 9,297 மகளிருக்கு வங்கிக் கடன் இணைப்புகள், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 20 விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்தல், முதலமைச்சரின் சூரிய சக்தியில் இயங்கும் மின் மோட்டார் பம்பு செட் அமைத்தல் உள்ளிட்ட இயந்திரமயமாக்கல் நலத்திட்ட உதவிகள். வனத்துறையின் சார்பில் 24 பயனாளிகளுக்கு சுழல் நிதி கடனுதவிகள்.

Source : Dinakaran

1 hour ago

Home Flash News