... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கியமான மாநிலங்களான தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தார்.

அசாம்:

அசாம் மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அங்குள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது.

கேரளம்:

கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது.

தமிழ்நாடு:

தமிழ்நாட்டிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ம் தேதி நடக்கிறது.

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. அங்குள்ள 294 தொகுதிகளில் ஏப்ரல் 23ம் தேதி, ஏப்ரல் 29ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது.

824 தொகுதிகள்:

5 மாநிலங்களுக்கும் சேர்த்து 824 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் 5 மாநிலங்களிலும் அமைக்கப்பட உள்ளது. சராசரியாக இந்த 5 மாநிலங்களுக்கும் சேர்த்து 7 ஆயிரம் பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 75 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. 
தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் 100 சதவீதம் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். 5 மாநிலங்களிலும் 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை பணியில் 40 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர்.

17.4 கோடி வாக்காளர்கள்:

5 மாநிலங்களுக்கும் சேர்த்து 17.4 கோடி வாக்காளர்கள் தகுதியான வாக்காளர்களாக உள்ளனர். தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளும், மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளும், கேரளாவில் 140 சட்டமன்ற தொகுதிகளும், புதுச்சேரியில் 30 தொகுதிகளும், அசாமில் 126 தொகுதிகளும் உள்ளது. 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் இந்த 5 மாநிலங்களிலும் அமைக்கப்பட உள்ளது. 

தேர்தல் பணிகளில் 5 மாநிலங்களிலும் சேர்த்து 8.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன் பயன்படுத்த அனுமதியில்லை. செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கு கவுன்டர்கள் அமைக்கப்படும். அதிகபட்சமாக 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படும்.

Source : ABP Desam

18 hours ago

Home Flash News